செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (14:13 IST)

இந்தியாவில் புதிய வகை கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

இந்தியாவில் இதுவரை புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது 
 
தென்னாப்பிரிக்கா ஹாங்காங் உள்பட ஒருசில நாடுகளில் B.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் அதேபோல் ஆப்பிரிக்க நாடுகளிலும் மிக அதிகமாக இந்த வைரஸ் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது 
 
அதிக வீரியத்துடன் பரவும் இந்த புதிய வகை கொரோனாவால் மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்றும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் பல நாடுகளின் சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
இந்த நிலையில் புதிய வகை  B.1.1.529 என்ற வைரஸ் இந்தியாவில் இதுவரை யாருக்கும் பாதிக்கப்படவில்லை என்றும் இருப்பினும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்க படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது