நீதிபதி ஆகிறார் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா

sivalingam| Last Modified ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (16:47 IST)
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நீதிபதி பதவி தேடி வந்துள்ளது.
 
இரண்டுமுறை அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா ஏற்கனவே சட்டப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். தற்போது அவர் ஓய்வு பெற்று குடும்பத்தினர்களுடன் காலத்தை கழித்து வருகிறார்

 
இந்த நிலையில் ஒபாமா விரும்பினால் அவருக்கு நீதிபதி பதவி தர தயார் என  இல்லினாய்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது. ஒரு நீதிபதிக்கு தேவையான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருப்பதால் அவருக்கு இந்த பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் நீதிபதி பதவியை ஏற்பது குறித்து ஒபாமா இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. நீதிபதி பதவியை ஏற்க அவர் ஒப்புக்கொண்டால் நீதிபதியாகும் முதல் முன்னாள் அதிபர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும்


இதில் மேலும் படிக்கவும் :