வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 25 அக்டோபர் 2017 (13:17 IST)

கருவில் இருக்கும் குழந்தைக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி

பொதுவாக ஒரு நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுவது தான் வழக்கம். ஆனால் அமெரிக்காவில் உள்ள ஒரு நீதிபதி, ஒரு பெண்ணின் கருவரையில் உள்ள குழந்தைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த விநோத சம்பவம் குறித்த தகவல் பின்வருமாறு:



 
 
அமெரிக்காவை சேர்ந்த கெயில்பே என்ற பெண் மூன்றாவது முறையாக கர்ப்பமானார். கடந்த 16ஆம் தேதி இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்துவிடும் என்று அந்த பெண் எதிர்பார்த்திருந்த நிலையில் வலி நின்றுவிட்டதை அறிந்து அதிர்ச்சியானார். 
 
இரண்டு, மூன்று நாட்கள் ஆகியும் குழந்தை பிறக்காததால் உடனே தன்னுடைய வயிற்றில் இருந்து வெளியேறுமாறு சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றத்தை அணுகினார். நீதிபதியும் தாயின் வயிற்றில் இருந்து உடனே வெளியேற கருவில் இருக்கும் குழந்தைக்கு 'கருவில் இருப்பவர்' என்ற முகவரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.