வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (10:46 IST)

கிம் மாயமாவது உலககிற்கு புதிது அல்ல: தூசி தட்டப்பட்ட கடந்த நிகழ்வு!

கிம் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், அவர் மரணித்துவிட்டதாகவும் பல செய்திகள் உலா வரும் நிலையில் 2014 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வும் வைரலாகி வருகிறது. 
 
உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் வடகொரிய அதிபர் கிம் ஜான் உங். 36 வயதாகும் அவருக்கு கடந்த மாதம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் உடல் நலம் மிகவும் மோசமானதாகவும், அபாய கட்டத்தில் அவர் இருக்கிறார் என்றும், மூளைச் சாவு அடைந்துவிட்டார் என்றும் தகவல்கள் பரவின.
 
ஆனால் இதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் கிம் ஜான் கடந்த சில வாரங்களாக எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வில்லை என்பதால் சந்தேகங்களும் எழுந்துள்ளன. கிம் எங்கே இருக்கிறார் என்பது பெரிய கேள்விகுறியாக உள்ள நிலையில் 2014 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு ஒன்று வெளியாகியுள்ளது. 
 
ஆம், கிம் இதுபோன்று காணாமல் போது இது முதல் முறையல்ல. 2014 ஆம் ஆண்டு மாதக்கணக்கில் காணாமல் போன அவர் திடீரென்று ஊடகத்தில் காட்சியளித்து ஆச்சர்யம் அளித்தார் என தெரிவித்துள்ளனர்.