செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (09:15 IST)

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணம்....??

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று மரணித்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் தீயாய் பரவி வருகிறது.  
 
அணு ஆயுத சோதனை, அமெரிக்காவுடன் மோதல் என பரபரப்பு கூட்டி வந்தவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். இவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி ஒன்று வெளியானது.   
 
ஆம், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் செய்துக்கொண்ட இதய அறுவை சிகிச்சையால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக அந்த செய்தி தெரிவித்தது. அவர் வடகொரியாவின் தலைநகரான பியாங்காங்கில் இருந்து 150 கிமி தொலைவில் உள்ள ஹ்யாங் சங் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதாகவும், அவர் அங்கு தான்  இருப்பதாகவும் கூறப்பட்டது. 
 
இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்கள் செய்திகள் தீயாய் பரவி வருகிறது. இது குறித்து வடகொரியாவோ, அண்டை நாடான தென்கொரியாவோ எந்த ஒரு செய்தியையும் வெளியிடாத நிலையில் டிவிட்டரில் #KIMJONGUNDEAD என்ர ஹேஷ்டேட் டிரெண்டாகி வருகிறது. 
 
கடைசியாக ஏப்ரல் 11 ஆம் தேதி தான் கிம் ஊடகத்திற்கு முன் காணப்பட்டார், ஏப்ரல் 12 அவருக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்க கூடும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.