வட கொரிய அதிபர் கிம் எங்கு இருக்கிறார்??
உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறபடும் கிம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அணு ஆயுத சோதனை, அமெரிக்காவுடன் மோதல் என பரபரப்பு கூட்டி வந்தவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். இவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் செய்துக்கொண்ட அறுவை சிகிச்சை ஒன்றுக்குப் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக உளவுத்துறையை கண்காணிக்கும் அமெரிக்காவின் உயரதிகாரி தகவல் வெளியிட்டுள்ளதாக பிரபல ஆங்கில தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடைசியாக ஏப்ரல் 11 ஆம் தேதி தான் அவர ஊடகத்திற்கு முன் காணப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. ஏப்ரல் 12 அவருக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்க கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தியை வட கொரியாவின் முன்னாள் சிஐஏ துணை பிரிவு தலைவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கிம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அவை கூறுவதாவது, வடகொரியாவின் தலைநகரான பியாங்காங்கில் இருந்து 150 கிமி தொலைவில் உள்ள ஹ்யாங் சங் மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதற்காக ஜெர்மெனி மற்றும் ஜப்பானில் இருந்து பிரத்யேக இயந்திரங்கள் வரவழைப்பட்டதாகவும், இதனை சிறப்பாக கையாள தெரிந்த மருத்துவர் ஒருவரே அறுவை சிகிச்சை செய்ததாகவும் தெரிகிறது, அந்த மருத்துவமனை கிம் குடும்பத்திற்காக கட்டப்பட்டதாகவும் தற்போது அவர் அங்கு தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.