நேபாளம்: பசுவை கொன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறை
நேபாளத்தில் 3 பசுக்களை கொன்றவருக்கு பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் 12 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.
நேபாளத்தில் அதிகமாக இந்துக்கள் வாழ்வதால் அங்கு பசுவை தெய்வமாக பார்க்கின்றனர். மேலும் அங்கு கடந்த 2015ம் ஆண்டு பசுவை தேசிய விலங்காக அறிவித்துள்ளனர். இதனால் நேபாளத்தில் பசுவதை தடுப்பு சட்டம் அமலில் உள்ளது.
இந்நிலையில் அந்நாட்டில் பசுக்களை வளர்க்கும் யாம் பகதூர் என்ற நபர் தான் வளர்த்த 3 பசுக்களை கொன்றுள்ளார். இதனை கண்ட அவரது அண்டை வீட்டுகாரர் இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.
இதனால் யாம் பகதூரை போலீசார் பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட யாம் பகதூருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.