புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 மார்ச் 2018 (12:45 IST)

சிறுமியின் வாயில் மாட்டு சானத்தை தினித்த பெண் கைது

நேபாளத்தில் சிறுமி ஒருவர் செய்த தவறிற்காக, அவளது வாயில் மாட்டு சானத்தை தினித்த பெண் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
நேபாளத்தில் கொல்புரில் கிதாபரியர்(50) என்ற பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டின் வாசலில் 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். சிறுமி நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுமி, கிதாபரியரின் வீட்டுக் குழாயை உடைத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிதாபரியர், சிறுமியின் வாயில் மாட்டு சாணத்தை திணித்துள்ளார்.
இதனையடுத்து அழுதுகொண்டே வீட்டிற்கு சென்ற சிறுமி, நடந்தவற்றை பெற்றோரிடம் கூறினாள். ஆத்திரமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் கிதாபரியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.