ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (19:18 IST)

’’மாலை 6 மணிமுதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு’’? வரவுள்ளதாக தகவல்

கொரோனா வைரஸில் மரபணு மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அதன் தாக்கம் 70% வேகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவியுள்ளதால் அந்நாட்டிற்கு விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் உருமாறிய கொரொனா வைரஸால் இதுவரை 20 பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து இந்த உருமாறிய கொரோனாவுக்குக் கட்டுப்படுமா என்பது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த மார்ச்சில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரங்குபோன்று, தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் இரண்டாம் கட்ட கொரோனா அலைபரவலைத் தடுக்க வேண்டி, மாலை 6 மணி முதல் அடுத்தநாள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படலாம என உறுதியற்ற தகவல்கள் வெளியாகிறது.

இப்புதிய உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்கனவே இருந்த கொரோனா வைரஸால் ஏற்பட்ட காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல்,  வாசனை, சுவையிழப்பு உள்ளிட்ட அறிகுறிகளுடன் மேலும் 7 புதிய அறிகுறிகள் தென்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதில், அதிக சோர்வு, பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசைவலி,  தோலில் அரிப்பு, போன்ற பல அறிகுறிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பழைய கொரொனா தொற்றுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையே தற்போது உருமாறிய கொரொனா தொற்றுக்கும் அளிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இதன் பலன் என்ன சிகிச்சை பலனளிக்கிறதா என்பது இனிமேல் போகப்போகத்தான் தெரியும்.  அதுவரை அரசு மக்களைக் காக்கப் பலவித தடுப்புமுறைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளதால் அதன்படி நடந்து, எங்கும் சென்றால் முகக்கவசத்துடன், சமூக இடைவெளியுடன் இருந்தால் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.