செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2019 (13:37 IST)

3 நாட்கள் விடுமுறை 4 நாட்கள் வேலை! – மைக்ரோசாஃப்ட் புதிய முயற்சி!

வாரத்தில் 3 நாட்கள் விடுமுறையும் 4 நாட்கள் வேலையும் செய்யும் வகையில் புதிய சலுகையை தங்களது பணியாளர்களுக்கு அளித்துள்ளது மைக்ரோசாஃப்ட்.

ஐடி நிறுவனங்கள் பல தங்களது பணியாளர்களை திருப்தி செய்யும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. பல ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்க அலுவலகத்தில் நீச்சல் தொட்டி முதல் விளையாட்டு அரங்கம் வரை அமைத்து கொடுத்திருக்கிறார்கள்.

ஊழியர்கள் அலுவலக நேரத்தை தவிர தங்கள் தனிப்பட்ட வாழ்வை வாழ போதிய நேரம் கிடைப்பதில்லை. இதை மனதிற் கொண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஜப்பான் அலுவலகம் ஒரு சோதனை முயற்சியை மேற்கொண்டது. ஊழியர்களுக்கு வாரம் 3 நாட்கள் விடுமுறையும், 4 நாட்கள் பணியும் இருக்குமாறு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்திற்கு பிறகு பணியாளர்களின் திறன் மேம்பாட்டிலும், செயல் வேகத்திலும் முன்னேற்றம் கண்டிருப்பதாக ஜப்பான் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் அனைத்து மைக்ரோசாஃப்ட் அலுவலகங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.