விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!
வரும் 2026 தேர்தலில் விஜய் கட்சி தான் திமுக கூட்டணிக்கு பெரிய தலைவலியாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், அந்த கட்சியை ஆரம்பத்திலேயே முடக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில், திமுகவையும் பாஜகவையும் ஒரே நேரத்தில் அதிரடியாக விமர்சனம் செய்து விஜய் வருகிறார். அவரது அறிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் தான் விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களம் இறக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனுக்கு ஏற்கனவே ராஜ்யசபா உறுப்பினர் பதவி தர இருக்கின்றனர். அதற்கு பதிலாக, அவர் திமுக கூட்டணிக்கு வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வார் என்றும் கூறப்படுகிறது.
நாளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் விஜயைப் பற்றிய விமர்சனங்களை கமல்ஹாசன் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக தலைவர்கள் கமல்ஹாசனை களம் இறக்க முடிவு செய்திருப்பதாகவும், முதல்கட்டமாக விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில், தொடர்ந்து கமல்ஹாசனும் சுற்றுப்பயணம் செய்து, விஜய் பேசிய கருத்துகளுக்கு பதிலடி கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
நாளை நடைபெறும் தமிழ் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், விஜய் குறித்து கமல்ஹாசன் விமர்சனம் செய்வார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
Edited by Mahendran