திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2025 (15:02 IST)

இன்ஸ்டாவில் காதல்.. சொல்லியும் கேக்கல..! மகளுக்கு முட்டை பொறியலில் விஷம் வைத்த தாய்! என்ன நடந்தது?

கள்ளக்குறிச்சியில் இன்ஸ்டாகிராமில் காதலித்து வந்த மகளுக்கு தாயே விஷம் வைத்துக் கொள்ள முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு குறிச்சி என்ற பெண் உள்ள நிலையில் அவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். இந்நிலையில் குறிஞ்சிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக சாய்குமார் என்ற நபரும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது.

 

இந்த விஷயம் மல்லிகாவிற்கு தெரிய வந்தபோது அந்த காதலை கைவிடுமாறு குறிஞ்சியிடம் சண்டை போட்டிருக்கிறார். ஆனால் அதற்கு குறிஞ்சி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மல்லிகா முட்டை பொறியலில் எலி பேஸ்ட்டை கலந்து குறிஞ்சிக்கு கொடுத்துள்ளார். இதனால் சிறிது நேரத்தில் குறிஞ்சி வாயில் நுரைத்தள்ளி மயங்கி விழுந்துள்ளார்.

 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குறிஞ்சியின் அண்ணனும், அப்பா முனுசாமியும், உடனே குறிஞ்சியை கொண்டு சென்று கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் குறிஞ்சிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தாய் மல்லிகாவை கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K