1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Musharraf blames india

இந்தியாவை உசுப்பேற்றும் முஷாரப்!

பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப் தான் கார்கில் மோதலுக்கு காரணமானமானவர்.


 
 
இந்நிலையில், இவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, ”யூரி தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானை தாக்கப்போவதாகவும், இதற்காக நேரம் இடம் குறிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி ஆகியோர் வெளிப்படையாக கூறி மிரட்டல் விடுத்தனர். 
 
இந்நேரம் நான் அதிகாரத்தில் இருந்திருந்தால் உடனடியாக பதிலடி கொடுத்திருப்பேன். இது மிகவும் முக்கியமான நேரம். தாக்குதலுக்கான நேரம் இடம் குறித்து வெளிப்படையாக கூறக்கூடாது. இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தும். போர் சூழ்நிலையை இந்தியா தான் உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் அல்ல.” என்றார்.
அடுத்த கட்டுரையில்
மோடியின் அனல் தெறிக்கும் பேச்சு!