வியாழன், 1 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : திங்கள், 3 அக்டோபர் 2016 (01:09 IST)

மோடியின் அனல் தெறிக்கும் பேச்சு!

மோடியின் அனல் தெறிக்கும் பேச்சு!
டெல்லியில் நடந்த வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான சிறப்பு மையத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,


 
 
”கடந்த இரு உலகப்போரின் போது லட்ச கணக்கான இந்தியர்களை நாடு இழந்தது. இருப்பினும் வேறு ஒரு நாட்டை ஆக்கிரமிக்கும் பொருட்டு எந்தவொரு நாட்டையும் இந்தியா முதலில் தாக்கியதில்லை. இந்தியா எப்போதும் நிலத்தின் மீது ஆசை கொண்டது கிடையாது.
 
 
இந்தியாவுக்கு அண்டை நாடுகளின் அரசியலில் ஈடுபடுவதையோ அல்லது அதிகாரத்தை சுருட்டிக் கொள்வதில் நம்பிக்கை இல்லை. கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு நெருக்கடியான சூழலில் சிக்கித் தவித்த இந்தியர்கள் மட்டுமல்ல வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களைக் கூட அரசு எவ்வாறு மீட்டது என்பதை உலகமே அறியும்.” என்றார்.