விஞ்ஞானி ஸ்டீபன் மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுந்தர்பிச்சை இரங்கல்
பிரபல இயற்கை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76வது வயதில் மரணம் அடைந்தார் என்பதை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் விஞ்ஞானி ஸ்டீபன் மறைவிற்கு உலகம் முழுவதிலும் உள்ள சக விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் தமிழரான சுந்தர் பிச்சை தனது டுவிட்டரில் விஞ்ஞானி ஸ்டீபனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், 'இந்த உலகம் ஒரு அழகான மனதை உடையவரையும், அதிபுத்திசாலித்தனமான விஞ்ஞானியையும் இழந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
மேலும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பாரத பிரதம நரேந்திரமோடி, ஆகியோர்களும் இரங்கல் தெரிவித்துள்ளன.ர் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் 'பேராசிரியர் ஸ்டீபன், மிகத்திறமை வாய்ந்த ஒரு விஞ்ஞானி. அவர் உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகளுக்கு முன்னோடியாக இருந்தவர் அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்' என்று கூறியுள்ளார்.