திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 10 மார்ச் 2018 (08:01 IST)

கையெடுத்து கும்பிட்ட அத்வானியை கண்டுகொள்ளாமல் போன மோடி?

திரிபுரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி பதவியேற்புவிழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியை கண்டுகொள்ளாமல் அவமதித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது

நேற்று திரிபுராவில் பிப்லாப் தேப் முதல்வராக பதவியேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி, அத்வானி, ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொள்ள மேடைக்கு வந்த பிரதமர் மோடி, அனைவரின் வணக்கத்தையும் கையெடுத்து கும்பிட்டு ஏற்றுக்கொண்டு பதில் வணக்கம் செலுத்தினார். ஆனால் எல்.கே.அத்வானி கையெடுத்து கும்பிட்டு வணக்கம் செலுத்தியபோது அவரை கண்டுகொள்ளாமல் அவருக்கு அருகில் இருந்த முன்னாள் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் கையைப் பிடித்து சிறிது நேரம் பேசிவிட்டு நாற்காலியில் மோடி அமர்ந்தார். இதனால் அத்வானியின் முகம் சுருங்கியதை பார்க்க முடிந்தது.

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. அத்வானிக்கு கிடைக்க வேண்டிய பிரதமர் பதவியை கைப்பற்றிய மோடி, அவருக்கு உரிய மரியாதையை தராமல் அவமதித்துவிட்டதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.