4 நாட்கள் பயணமாக பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகை

france
Last Updated: வெள்ளி, 9 மார்ச் 2018 (12:19 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் 4 நாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

 
 
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தனது மனைவி, பிரான்ஸ் தொழில் அதிபர்கள் மற்றும் அமைச்சர்களுடன் இன்று இந்தியாவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வருகையால் இருநாட்டின் பொருளாதாரம், அனுசக்தி ஒத்துழைப்பு, கடல் சார் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று பேசப்படுகிறது.
 
இம்மானுவேல் மெக்ரான் வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியுடன் 121 நாடுகள் பங்கேற்கும் சூரிய ஒளி உற்பத்தி கூட்டமைப்பில் பங்கேற்கிறார் . மேலும் 12-ம் தேதி திங்கள்கிழமை வாரணாசியில் உள்ள சூரிய ஒளி உற்பத்தி உலையை தொடங்கி வைக்கிறார்.
 
இம்மானுவேல் மெக்ரான் வரும் திங்கள்கிழமை வரை  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :