1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified வியாழன், 9 ஜூன் 2022 (09:39 IST)

35 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு: மாணவர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்

corona
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் 35 மாணவர்களுக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மாணவர்கள் அனைவரும் வீடு திரும்ப அறிவுறுத்த பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று சுமார் 200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் 235 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 35 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக விடுதியில் இருக்கும் மாணவர்கள் அனைவரும் வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மாணவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது