வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (09:34 IST)

7,000-த்தை தாண்டி பாதிப்பு - எந்த மாநிலத்தில் உச்சம்; தமிழகத்தின் நிலை என்ன??

கொரோனா தினசரி பாதிப்பு உயர்வதற்கு மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்ததே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

 
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்து வந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கியுள்ளது.
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,240 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 5 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று 7 ஆயிரத்தை தாண்டியிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று இந்த அளவு கொரோனா தினசரி பாதிப்பு உயர்வதற்கு மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்ததே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ஆம், மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 2,701 ஆக உயர்ந்து உள்ளது. மும்பையில் மட்டும் 1,765 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் புதிய பாதிப்பு 2,271 ஆகவும், டெல்லியில் 564 ஆகவும், கர்நாடகாவில் 376 ஆகவும், அரியானாவில் 247 ஆகவும், தமிழ்நாட்டில் 195 ஆகவும், உத்தரபிரதேசத்தில் 163 ஆகவும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.