முதலையை திருமணம் செய்த மெக்சிகோ மேயர்! – இதுதான் காரணமா?
மெக்சிகோவில் உள்ள நகர மேயர் ஒருவர் பெண் முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிறிய நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுடா. இந்த நகரத்தின் மேயராக விக்டர் ஹ்யூகோ சோசா என்ற நபர் பதவி வகித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் ஒரு பெண் முதலையை திருமணம் செய்து கொண்டுள்ளார். கிறிஸ்தவ தேவாலயத்தில், கிறிஸ்தவ முறைப்படி வெள்ளை கவுன் அணிவித்த முதலையை திருமணம் செய்து கொண்ட அவர் அதற்கு முத்தமும் கொடுத்தார். சில பாதுகாப்பு காரணங்களுக்காக முதலையின் வாயைக் கட்டியிருந்தனர்.
இது அந்நாட்டில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதற்காக இயற்கையை வழிபடும் வகையில் நடத்தப்படும் ஹிஸ்பானிக் கால சடங்கு முறையாகும். இதுகுறித்து பேசிய மேயர் “இயற்கையிடம் மழை, உணவு, மீன் வளம் வேண்டி நாங்கள் இந்த சடங்கை மேற்கொள்கிறோம். இது எங்கள் நம்பிக்கை” என தெரிவித்துள்ளார்.