1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (14:52 IST)

தஞ்சை மேயர் அறையில் கருணாநிதி புகைப்படம் அகற்றம்: பெரும் பரபரப்பு

tanjavur mayor
தஞ்சை மேயர் அறையில் கருணாநிதி புகைப்படம் அகற்றம்: பெரும் பரபரப்பு
தஞ்சை மேயர் அறையில் கருணாநிதி புகைப்படத்திற்கு பதிலாக உதயநிதி புகைப்படம் இருப்பதை பார்த்து திமுக தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் புகைப்படங்கள் இருந்து வருவது வழக்கமாக உள்ளது 
 
ஆனால் தஞ்சை மேயர் அலுவலகத்தில் கருணாநிதியின் புகைப்படத்திற்கு பதிலாக உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் உள்ளது. இதை பார்த்த திமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
கருணாநிதி புகைப்படத்தை அகற்றிவிட்டு உதயநிதியை புகைப்படத்தை வைப்பதா? என்று அவர்கள் சோகத்தோடு கூறி வருகின்றனர் 
 
ஆனால் இதுபற்றி எந்த புகாரையும் திமுக தலைமைக்கு அனுப்ப முடியாது என்பதால் அவர்கள் மனதுக்குள்ளேயே பொறுமை கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது