புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (12:20 IST)

Watch Video: என்னா தரம்?.. திறப்பு விழாவின்போதே இடிந்து விழுந்த பாலம்!

Mexico
மெக்சிகோவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்பு விழா அன்றைக்கே இடிந்து விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மெக்சிகோ நாட்டின் மொரிலோஸ் மாகாணத்தில் உள்ள ஹர்வவசா நகரில் மக்கள் பயன்பாட்டிற்காக பாலம் கட்ட நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அப்பகுதியில் மரக்கட்டை மற்றும் இரும்பு சங்கிலியால் ஆன பாலம் அமைக்கப்பட்டது.

இந்த புதிய பாலம் இன்று அந்த நகர மேயரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் நகர மேயர், அவரது மனைவி மற்றும் பொதுமக்கள் ஆகியோர் புதிய மேம்பாலத்தில் நடந்து சென்றனர்.

அப்போது பாரம் தாங்காமல் புதிதாக கட்டப்பட்ட பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பாலத்தில் நடந்து சென்ற மேயர் அவரது மனைவில் உள்ளிட்ட பலர் 10 அடி பள்ளத்தில் விழுந்தனர். அதிகமான பாரத்தை தாங்காமல் பாலம் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.