1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (19:36 IST)

சைக்கிள் ரிக்ஷாவில் விஜய் பட நடிகர்...வைரல் வீடியோ

prakashraj
தமிழ் சினிமாவில் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான டூயட் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். இவர், வசூல்ராஜா, கில்லி, அபியும் நானும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து சிறந்த நடிகர் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் யஷ் நடிப்பில், பிரஷாந்த் நீல்ஸ் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் -2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துப்பலரது பாராட்டுகளையும் பெற்றார் பிரகாஷ்ராஜ். இவர்  தற்போது விஜயுடன் இணைந்து,விஜய்66 என்ற படத்தில் வம்சி இயக்கத்தில்  நடித்து வரும் நிலையி, நியூயார்க்கில் சைக்கிள் ரிக்ஷாவில் வலம் வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.