தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம்

Last Updated: திங்கள், 22 ஜூலை 2019 (09:06 IST)
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள செய்தியில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், வட தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள நீலகிரி, கோவை, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :