வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 ஜூலை 2019 (10:32 IST)

தும்பிக்கை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த யானை: உலகை உலுக்கிய புகைப்படம்

தென் ஆப்ரிக்காவின் காட்டுப்பகுதியில் தும்பிக்கை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்துகிடந்த யானையின் புகைப்படம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனரான ஜெஸ்டின் சுலிவான், சமீபத்தில் தென் ஆப்ரிக்காவின் போட்ஸ்வானா வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அந்த வனப்பகுதியில் உள்ள விலங்குகளின் அரிய புகைப்படங்களை எடுக்க பல நவீன புகைப்பட கருவிகளையும் கொண்டு சென்றுள்ளார். வனத்தில் ஏதேனும் அரிய விலங்குகள் தென்படுகின்றனவா என சிறிய அளவிலான பறக்கும் கேமராவான ’டிரோனை’ பறக்கவிட்டு இயக்கினார். அப்போது அந்த வனத்தில் யானை ஒன்று, தும்பிக்கை தனியாகவும், உடல்பகுதி தனியாகவும், துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்ததை பார்த்து ஜெஸ்டின் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் யானை இறந்துகிடந்த இடத்திற்கு சென்று தனது DSLR கேமராவினால் யானையின் அருகில் சென்று புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம் உலகில் உள்ள பல செய்தி ஊடகங்களில் வெளிவந்தன. இதனை பார்ப்பவர்களின் இதயங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படத்தை குறித்து ஆவணப் பட இயக்குனர் ஜெஸ்டின், இந்த புகைப்படத்திற்கு ‘டிஸ்கனெக்‌ஷன்” என பெயரிட்டுள்ளதாகவும், இதன் அர்த்தம் யானைக்கும் தும்பிக்கைக்கும் இடையேயான முறிவை பற்றியது மட்டுமல்லாது, விலங்குகள் வேட்டையாடப்படுவதற்கும், அவற்றை கண்டுக் கொள்ளாத நமக்கும்தான் இந்த பெயர் எனவும் கூறியுள்ளார்.