டிக்டாக் அடிமையான கணவர்… திருத்த முடியாத மனைவி எடுத்த முடிவு !

டிக் டாக்
Last Modified செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (10:39 IST)
டிக்டாக்

டிக்டாக்கில் எந்நேரமும் இருந்துகொண்டு பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கணவரால் மனமுடைந்த மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது விரிஞ்சிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் தன்னுடன் படித்த யாமினி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால் திருமணம் முடிந்த ஒரு ஆண்டு ஆகியும் எந்த வேலைக்கும் செல்லாமல் வேலைக்கு எதுவும் செய்யாமல் டிக்டாக், பேஸ்புக் என சமுக வலைதளங்களிலேயே மூழ்கிக் கிடந்துள்ளார் செல்லமுத்து. இதில் அவருக்குப் பல பெண்களோடு தொடர்பு ஏற்பட்டுள்ளதை மனைவி யாமினி கண்டுபிடித்துள்ளார்.

இது சம்மந்தமாக யாமினி அவரைக் கேட்டபோது ’நான் அப்படிதான் இருப்பேன்’ என அவரிடம் சண்டைக்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த யாமினி விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரைக் காப்பாற்றிய உறவினர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த போலீஸார் இருவரிடமும்
விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாக இதுபோல யாமினி ஒருமுறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :