செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (13:55 IST)

கோலி, ரோஹித்தை பின்னுக்கு தள்ளிய லோகேஷ் ராகுல்! – புதிய சாதனை!

ஐசிசியின் டி20 தரவரிசையில் கோலி, ரோகித் ஷர்மாவை விட அதிக புள்ளிகள் பெற்று சாதனை புரிந்துள்ளார் கே.எல்.ராகுல்
ICC T20 Rank List

நடந்து முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே.எல்.ராகுல். ஒரு தொடரிலேயே ஓப்பனிங் பேட்ஸ்மேன், மிடில் ஆர்டர், கடைசி பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் மற்றும் இந்திய அணி கேப்டன் என பல அவதாரங்களை எடுத்த கே.எல்.ராகுல்தான் இந்த ஆட்டத்தின் பேச்சுக்குரிய நபராக உள்ளார்.

இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் கே.எல்.ராகுல் 823 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் ஆசம் முதல் இடத்தில் உள்ளார். இந்த தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 9 மற்றும் 10 வது இடத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா உள்ளனர்.

இந்த பட்டியலை வெளியிட்டுள்ள ஐசிசி சமீப காலமாக ரோகித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுலின் புள்ளிகள் அதிகரித்து வருவதாக பாராட்டுகளை தெரிவித்துள்ளது.