1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2017 (16:52 IST)

உடலுறவில் உச்சம் பெற்று பார்வையை பறிகொடுத்த வாலிபர்...

வாலிபர் ஒருவர் தனது ஆசை காதலியுடன் உடலுறவில் ஈடுபட்டு, அதிக கிளர்ச்சியின் மூலம் அதீத உச்சத்தை எட்டி, ஒற்றைக்கண்ணில் பார்வை போய் மீண்ட சம்பவம் லண்டனில் நடந்து முடிந்துள்ளது.


 
லண்டலில் வசித்து வரும் 29வயதான ஒரு வாலிபர் தனது காதலியுடன், இரவு முழுவதும் உடலுறவில் ஈடுபட்டு, கிளைமேக்ஸில் உச்சம் அடைந்து அதிக ஆர்கஸம் அடைந்தார். காலையில், அவர் தெருவில் இறங்கி நடக்கும் போது, அவரின் இடது கண்ணில் மட்டும் பார்வை மங்கிப்போனது தெரிய வந்தது.
 
பதறிய வாலிபர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று நடந்ததைக் கூற, அவரது கண்ணை மருத்துவர்கள் சரி செய்து மீண்டும் பார்வைய வரவழைத்தனர். அதன் பின்பே வாலிபர் பெருமூச்சு விட்டார். அவரின் காதலியும் நிம்மதி அடைந்தார்.
 
உடலுறவின் போது விந்து விரைவில் வெளியேறக்கூடாது என சிலர் மூச்சை அடக்குவார்கள். அது போன்ற சமயங்களில் மூளைக்கு ரத்தம் செல்வது தடுக்கப்பட்டு, 10 ஆயிரம் பேரில் அரிதாக ஒருவருக்கு இது போன்ற சம்பவங்கள் நடைபெறும். இது தற்காலிகமானதுதான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.