திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 23 நவம்பர் 2017 (17:33 IST)

சிறுமிகளுக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது

தெலங்கானா மாநிலத்தில் சிறுமிகளுக்கு சாக்லெட் கொடுத்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த 85 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 
தெலங்கானா மாநிலம் குஷாய்குடாவை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி தன்னிடம் முதியவர் சத்யநாராயண ராவ்(85) என்பவர் தவறாக நடத்துக் கொண்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகர் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் முதியவரை கைது செய்தனர்.
 
சத்யநாராயண ராவ் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. சிறுமிகளுக்கு சாக்லெட் மற்றும் இனிப்புகள் கொடுத்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையே வழக்கமாக செய்து வந்துள்ளார்.
 
மேலும் காவல்துறையினர் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.