1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2017 (16:52 IST)

பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க உயிரை மாய்த்துக்கொண்ட மர்ம நபர்!!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் பத்மாவதி. இதில் ரன்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
 
பத்வமாதி ராணி கதாபாத்திரத்தில் தீபிகா நடித்துள்ளார். படத்தை பார்க்காமலே வரலாற்றை மாற்றி படம் எடுத்துள்ளதாக பத்மாவதி திரைப்படத்திற்கு எதிராக கார்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
அவர்களை தொடர்ந்து பாஜகவும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து பத்மாவதி திரைப்படத்தை வெளியிட கூடாது என நாடு முழுவது பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.
 
மேலும், இந்த படத்தில் ராஜபுத்ர சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக வட மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. 
 
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நகர்ஹர்கா கோட்டையில் அடையாள தெரியாத நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தின் அருகே பத்மாவதி படத்திற்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் பத்மாவதி படத்தை எதிர்க்கிறோம், நாங்கள் உருவ பொம்மையெல்லாம் எரிக்க மாட்டோம், கொலை செய்துவிடுவோம் என்று கூறப்பட்டுள்ளது.