வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2017 (02:00 IST)

உலக அழகி மனுஷி சில்லாரை கொண்டாடும் சீன இளைஞர்கள்

இந்தியாவை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவி மனுஷி சிலலார் சமீபத்தில் இந்த ஆண்டுக்கான உலக அழகியாக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியான ஒருசில நிமிடங்களில் அவர் இந்தியர்களின் நாயகி ஆகிவிட்டார். பிரதமர் மோடி முதல் பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் அவர் பல மணி நேரம் டிரெண்டிங்கில் இருந்தார்





இந்த நிலையில் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவின் அதிகாரபூர்வ சமூக இணையதளமான வெய்போ என்ற இணையதளத்திலும் அவர் டிரெண்டிங்கில் இருந்தார். குறிப்பாக சீன இளைஞர்கள் இன்னும் மனுஷி சில்லாருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டே உள்ளனர்.

கங்கை நதிக்கரையில் பிறப்பவர்களுக்கு இயற்கையிலேயே அழகும் ஆரோக்கியமும் கைகூடி வருகிறது. அதுபோல மனுஷி சில்லரும் அழகாக இருக்கிறார் என்று ஒருவரும்,  இந்தியா முழுக்க அழகிகள் தான் இருக்கின்றனர் என்று இன்னொருவரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.