திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 23 நவம்பர் 2017 (17:01 IST)

கணவர் பிறந்தநாளிற்கு சமந்தா என்ன செய்தார் தெரியுமா? வீடியோ...

இன்று தெலுங்கு நடிகரும், நடிகை சமந்தாவின் காதல் கணவருமான நாக சைதன்யாவிற்கு பிறந்தநாள். தமிழ், தெலுங்கு என இரு திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா.
 
நடிகைகளுக்குத் திருமணம் ஆனாலே நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவார்கள் அல்லது மார்க்கெட் போய் நடிக்க வாய்ப்பில்லாதபோது திருமணம் செய்து கொள்வார்கள். 
 
ஆனால், முன்னணி நடிகையாக இருக்கும்போதே திருமணம் செய்து  கொண்டார் சமந்தா. இவரின் திருமணம் அக்டோபர் மாதம் 6 மற்றும் 7 ஆம் தேதி நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
 
திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இவரது கைவசம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சில படங்கள் உள்ளன.
 
இந்நிலையில் இன்று திருமணத்திற்கு பிறகு வந்துள்ள தனது கணவரின் பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். நாக சைத்தன்யாவுடன் கேக் வெட்டியும் அவருக்கு முத்தம் கொடுத்தும் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அதேபோல் தனது இன்ஸ்ட்டிராகிராம் பக்கத்திலும் நாக சைதன்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். 


 
நாக சைதன்யாவின் பிறந்தநாள் வீடியோவை நடிகை அனுபமா தனது விடிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.