திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2017 (11:36 IST)

அஜீத்தை பாராட்டும் பார்வையற்ற ரசிகர் - வைரல் வீடியோ

நடிகர் அஜீத்தை பார்வையற்ற ரசிகர் ஒருவர் பாராட்டி பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 
அஜீத் நடிகர் என்பதையும் தாண்டி மனிதநேயம் மிக்க ஒரு நபராக திரைத்துறையில் மதிக்கப்படுகிறார். திரைத்துறையை சேர்ந்த, சேராத பலருக்கும் அவர் பல வகைகளில் பண உதவிகள் செய்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.
 
தன்னை ரசிகர்கள் பின்பற்றக் கூடாது என தன்னுடைய ரசிகர் மன்றத்தையே அவர் கலைத்து விட்டார். ஆனாலும், அவருக்கு ரசிகர்கள் கூடிக்கொண்டுதான் போகிறார்களே தவிர, குறையவில்லை. மேலும், திரைத்துறை பின்னணி இல்லாமல், தனி ஆளாக போராடி தற்போது ஒரு மாஸ் ஹீரோவாக மாறியுள்ளார்.
 
இந்நிலையில், கண் பார்வையற்ற ஒரு நபர் அவரை பற்றி பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.