1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Love with a 2 year old teacher

2 வயது மூத்த ஆசிரியையுடன் காதல்..இளைஞர் எடுத்த விபரீத முடிவால் பரபரப்பு...

love affair
ராஜஸ்தான் மாநிலத்தில் தன்னைவிட 2 வயது மூத்த ஆசிரியை மீது ஏற்பட்ட காதலால் ஒரு நபர் விபரீத முடிவில் இறங்கிய சம்பவம் பரபரப்பை   ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள அஜ்மீர் என்ற பகுதியில் வசிப்பவர் கீர்த்தி சோனி(32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

இவர் மீது விவேக் சிங் ( 30) என்ற நபர் ஒருதலையாக காதல் செய்து வந்துள்ளார். பலமுறை ஆசிரியையிடம் இவர் தன் காதலை கூறிய நிலையில் ஆசிரியை சோனி இவரது காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதுகுறித்து, ஆசிரியை சோனி தன்   நண்பர் அனில் என்பவரிடம் கூறியுள்ளார். பின்னர், இருவரும் இணைந்து விவேக்கை ஒரு  ஓட்டலுக்கு அழைத்துள்ளனர். அதன்பின்னர், மூவரும் ஓட்டலில் சந்தித்துப் பேசியுள்ளனர்.  இந்தச் சந்திப்பிற்குப் பின் விவேக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆசிரியை சோனியை பலமுறை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில், சோனி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.  அருகில் உள்ளோர் அவரை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இத்தாக்குதலில் ஈடுபட்ட விவேக் தப்பியோடிய  நிலையில் அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
இந்துஜா குழுமங்களின் தலைவர் ஸ்ரீசந்த் பரம்சந்த் காலமானார்