1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (23:17 IST)

பிரபல காமெடி நடிகர் மீது இளம்பெண் பாலியல் புகார்

abuse
பிரபல காமெடி நடிகர் மீது  பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் என்ற பகுதியில் வசிப்பவர் கயாலி சஹாரன். இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருவதுடன் காமெடி நடிகராகவும் இயக்குனராகவும் அறியப்படுகிறார்.

இந்த நிலையில், இவர் மீது அதேபகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஜெய்பூர் நகரின் மானசரோவர் போலீஸ் ஸ்டேசனில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில்,  திரைத்துறையில் எனக்கு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, என்னை ஓட்டல்  ஒன்றுக்கு வரவழைத்தார்.

அவரை நம்பி அந்த ஓட்டலுக்கு அனன் சென்றேன். அப்போது அவர் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தபோது அவர் என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பின் அங்கிருந்து ஓடிவிட்டார் என்று கூறியுள்ளார்.

இந்தப் புகார் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரித்து வருகின்றனனர். இந்த நிலையில் நடிகர் சஹாரன் விரைவில் ஆம் ஆத்மி கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.