வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2020 (14:28 IST)

கொரோனாவிலிருந்து மீண்டாலும் இது தொடரும்! – லண்டன் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டு வரும் மக்கள் பலர் உடலியல்ரீதியான நிரந்தர பாதிப்புக்கு உள்ளாவதாக லண்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து உலகம் மெல்ல மீண்டு வரும் நிலையில், உலக நாடுகளும் மருந்து கண்டுபிடிப்பதில் முடிவை எட்டியுள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டு வருவோரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளில் அவர்களுக்கு சில குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது கொரோனா பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களில் பத்தில் ஒருவர் வாசனை நுகரும் தன்மையை இழத்தல், சுவை உணரும் தன்மையை இழத்தல் அல்லது செவியின் கேட்கும் திறன் குறைதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குணமடைந்து சில நாட்களில் சிலருக்கு இந்த பிரச்சினைகள் சரியானதாகவும், ஆனால் பலருக்கு கடந்த இரண்டு மாதங்களாக இந்த பிரச்சினைகள் நீடித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சக ஆய்வாளர்கள் சிலர் கூறும்போது இந்த மாதிரியான பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை கொண்டு பார்த்தால் அவர்களுக்கு முன்னர உடலியல் ரீதியான பிரச்சினைகள் இருந்திருக்கலாம் அல்லது சிகிச்சைக்கு அளிக்கப்படும் மருந்துகளின் விளைவால் அப்படி ஆகியிருக்கலாம். இது உடனடியாகவோ அல்லது நீண்ட காலம் கழித்தோ குணமாகலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.