ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2020 (14:13 IST)

கோலி மற்றும் தமன்னாவை கைது செய்ய கூறி வழக்கு – அதிரவைக்கும் காரணம்!

ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்த விராட் கோலி மற்றும் தமன்னா ஆகியோரைக் கைது செய்யவேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக ஆன்லைனில் சூதாட்டங்கள் அதிகமாகி உள்ளன. இதற்காக பல விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் விளம்பர தூதுவர்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால் இதன் மூலம் இளைஞர்கள் பணத்தாசையால் தங்கள் வருமானத்தையே மொத்தமாக இழந்து வருகின்றனர். இதனால் சமீபத்தில் ஒரு இளைஞர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர் ‘ஆன்லைன் சூதாட்டங்களை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்கும் தமன்னா மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோரைக் கைது செய்யவேண்டும்’ என மனுத்தொடுத்துள்ளார். இந்த வழக்கை ஏற்று விசாரித்த நீதிபதிகள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.