திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2020 (13:28 IST)

ரேஷன் கடைகளில் இனி இலவசம் இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் பொருட்கள் இலவசமாக வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, ரேஷன் கடைகளில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மக்கள் பொது இடங்களுக்கு சென்றால் பாதுகாப்பாக இருக்க முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக இலவச மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளன.

ஆனால் இனி ரேஷன் பொருட்களான அரிசி, ஜீனி போன்றவை இலவசமாக வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக ‘நியாய விலை கடைகளில் இனி இலவசப் பொருள்கள் கிடையாது. ஆகஸ்ட் மாதம் முதல் அத்தியாவசிய பொருள்களை பணம் கொடுத்துத் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆகஸ்ட் மாத பொருள்கள் வாங்குவதற்கான டோக்கன் 1,3,4 ஆம் தேதிகளில் வழங்கப்படும்’ என்ற செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியானது தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.