1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. lebanon warning israel for the attack

எங்களை தாக்கினால் கைகளை வெட்டுவோம்!.. இஸ்ரேலை எச்சரிக்கும் லெபனான்!...

lebanon
லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து கடந்த பல நாட்களாகவே இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் லெபனான் நாட்டுக்குள் நுழைந்தும் இந்த தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் தெற்கு லெபனானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது..

லெபனனில் குடியிருப்பு பகுதிகள், வணிக கட்டிடங்கள் மற்றும் எரிபொருள் நிலையம் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. மேலும் லெபனான் எல்லையில் உள்ள தைய்பே, லிதானி ஆகிய நகரங்களில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் பல தங்களின் மீது தாக்குதல் நடத்தி சிலரை கொன்றதாக இஸ்ரேல் கூறி இருக்கிறது..

இந்நிலையில்,  இஸ்ரேலின் தாக்குதலால் தெற்கு லெமனானின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள லெபனான் அதிபர் ஜோசப், ‘அமைதியை குலைப்பவர்களின் கை வெட்டப்படும்’ என என எச்சரித்திருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
கள்ளக்காதலியை வெட்டி உடலின் பாகங்களை பிரிட்ஜில் வைத்த கடற்படை அதிகாரி.. திடீரென போலீசில் சரண்..!