1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 15 மார்ச் 2025 (12:02 IST)

சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர செலுத்தப்பட்டது ராக்கெட்.. 9 மாதங்களுக்கு பின் தீர்வு..!

Sunita Williams.
சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரையும் அழைத்து வர, பால்கன் 9 என்ற ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த ஆண்டு ஜூன் மாதம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் விண்வெளி மையத்திற்குப் பயணம் செய்தனர். அவர்கள் எட்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து, அதன் பிறகு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் சென்ற ராக்கெட் பழுதடைந்ததால் திரும்பி வரும் முயற்சி தோல்வியடைந்தது.
 
இதனைத் தொடர்ந்து, பலமுறை அவர்களை பூமிக்கு அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை எந்தவித பலனும் அளிக்கவில்லை.
 
இந்த நிலையில், 9 மாதங்களாக இருவரும் விண்வெளி மையத்தில் இருந்து வருவதால், எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரு ராக்கெட் செலுத்த தீர்மானித்தது. இன்று, ப்ளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
 
இன்று அதிகாலை 4:33 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட இந்த ராக்கெட், விரைவில் சுனிதா மற்றும் வில் மோர் ஆகிய இருவரையும் பூமிக்கு அழைத்து வரும் என கூறப்படுகிறது.
 
Edited by Mahendran