திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2023 (16:11 IST)

ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா இணைந்து தனிக்கட்சி தொடங்கலாம்: ஜெயகுமார் யோசனை

jayakumar
ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகிய மூவரும் சேர்ந்து தனிக்கட்சி நடத்தலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் யோசனை கூறியுள்ளார். 
 
அதிமுகவை ஒருங்கிணைக்க சசிகலா முயற்சித்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக தற்போது ஒருங்கிணைத்து தான் இருக்கிறது என்றும் சசிகலா வேண்டுமானால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரையும் சேர்த்துக்கொண்டு தனிக்க கட்சி தொடங்கி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கலாம் என்றும் கூறினார்
 
மூவரும் ஒன்றுபட்டால் அவர்களுக்கு தான் வாழ்வு என்றும் தமிழக மக்களுக்கும் அதிமுக தொண்டருக்கும் எந்த பலனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் சசிகலா மூக்கில் நுழைக்க வேண்டாம் என்றும் அதிமுக குறித்து தேவையில்லாத கருத்துக்களை அவர் கூற வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva