1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 13 நவம்பர் 2023 (15:04 IST)

வரி செலுத்தவில்லை என குற்றச்சாட்டு.. துணை நிதி அமைச்சர் ராஜினாமா..!

resignation
தனது நிறுவனத்திற்கு வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து துணை நிதி அமைச்சர் என்ற பதவியை ராஜினாமா செய்துள்ள தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜப்பானில் நடைபெற்று உள்ளது.
 
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த துணை நிதி அமைச்சர் கென்ஜி காண்டா என்பவர் தனது நிறுவனத்திற்கு சரியாக வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் உடனே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ஜப்பான் பிரதமருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

கடந்த 2013 முதல் 2022 ஆம் வரையில் ஆன காலத்தில் துணை நிதி அமைச்சர் ஆக இருந்த கென்ஜி நிறுவனத்திற்கு  சொந்தமான நிலம் மற்றும் சொத்துகளுக்கு சரியான வரி செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட துணை நிதி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  தேசிய அரசியல் விவகாரங்களில் நான் பிஸியாகிவிட்டதால் வரி செலுத்துவதில் கவனம் செலுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Edited by Siva