வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (14:02 IST)

நீட் தேர்வால் உங்களுக்கு என்ன பிரச்சனை.. முதல்வரிடம் எங்கள் நிருபர்கள் கேட்பார்கள்: எல் முருகன்

L Murugan
நீட் தேர்வால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று எங்களுடைய தூர்தர்ஷன் நிருபர்கள் முதல்வரிடமும் ,உதயநிதி ஸ்டாலின் இடமும் கேள்வி கேட்பார்கள் என்று அமைச்சர் எம். முருகன் தெரிவித்துள்ளார்.

இன்று எல் முருகன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது தனியார் தொலைக்காட்சிகளுக்கு இணையாக தற்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி வளர்ந்து உள்ளது என்றும் பல புதிய டெக்னாலஜிகள் உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் அரசியல் விவாதங்கள் நடுநிலையோடு நடத்தப்படுகின்றது என்றும் மீண்டும் ஒலியும் ஒளியும் உள்பட  சினிமா நிகழ்ச்சிகளும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் எங்களுடைய நிருபர்கள் உங்களைப் போலவே  அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள் என்றும் விரைவில் முதலமைச்சர் மற்றும் உதயநிதியுடன் நீட் தேர்வால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்ற கேள்வியையும் கேட்பார்கள் என்றும் தெரிவித்தார்.

Edited by Mahendran