1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வியாழன், 30 மே 2024 (09:49 IST)

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. தேர்தல் முடிவு இப்படித்தான் இருக்குமோ?

தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பங்குச்சந்தை உச்சத்திற்கு செல்லும் என்றும் ஒருவேளை பாஜக தோல்வியடைந்தால் பங்குச்சந்தை சரியும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பங்குச்சந்தையில் சரிந்து வருவதை பார்க்கும் போது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களாக பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்ட நிலையில் இன்றும் பங்குச்சந்தை சரிந்துள்ளது என்றும் இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கிட்டத்தட்ட 300 புள்ளிகள் சரிந்து 74 ஆயிரத்து 205 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 100 புள்ளிகள் சரிந்து 22, 610 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
3 நாட்களாக தொடர்ந்து பங்குச்சந்தை சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் விரைவில் பங்குச்சந்தை மீண்டும் உயரும் என்ற நம்பிக்கையில் உள்ளது.
 
 
Edited by Siva