’’இனிமேல் அது கிடையாது’’ கோகோ கோலா நிறுவனத்தின் அதிரடி முடிவு…

plastic
Sinoj| Last Updated: புதன், 17 பிப்ரவரி 2021 (22:37 IST)


உலகளவில் குளர்பான விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் கோகோ கோலா…இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், உலகமெங்கும் அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் மாசுக்கு எதிராக மக்களும் தன்னார்வலர்களும் களமிறங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில்,
இயற்கை மாசுப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பொருட்களுக்கு விரைவில் பிரியாவிடை கொடுக்கவுள்ளது.

கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கோகோ கோலா நிறுவனம் எங்களின் காகித பாட்டில் இது என்று ஒரு சிறு வீடியோவை வெளியிட்டிருந்தது.

cococola

அதன்படி இனிவரும் கோகோகோலா பாட்டில்கள் பேப்பரால் உருவானதாக இருக்கும் என்று கூறியிருந்தது.

பிளாஸ்டிக் பொருட்கள் பெரும் இயற்கைச் சீரழிவையும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்திவரும் நிலையில் கோகோ கோலா நிறுவனத்தின் முடிவு பலவரையும் கவர்ந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :