திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2021 (12:16 IST)

டைனோசர்கள் அழிய குறுங்கோள் காரணம் அல்ல! – விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

பூமியில் பலகோடி ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த டைனோசர்கள் அழிந்தது குறித்து ஹாவர்டு ஆய்வாளர்கள் புதிய கருத்தை முன்வைத்துள்ளனர்.

பூமியில் மனிதன் தோன்றுவதற்கு முன்னதாக பெரிய அளவிலான ராட்சத ஜந்துக்கள் வாழ்ந்து வந்ததை சமீபத்திய அகழ்வாராய்ச்சி முடிவுகள் நிரூபிக்கின்றன. இந்த ஜீவராசிகளை ஆய்வாளர்கள் டைனோசாரஸ் என்று வகைப்படுத்துகின்றனர். பல கோடி ஆண்டுகள் முன்னதாக வாழ்ந்த இந்த ஜந்துக்கள் எப்படி இறந்தன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் இருந்து வருகின்றன.

கோடிக்கணக்கான ஆண்டுகள் முன்பு பூமியை சக்திவாய்ந்த குறுங்கோள் ஒன்று மோதியதால் அவை இறந்திருக்கலாம் என்பதே இன்று வரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஹாவர்டு விஞ்ஞானிகள் புதிய கருத்தை தெரிவித்துள்ளனர். குறுங்கோள் தாக்கத்தால் இறந்திருந்தால் டைனோசர் படிமங்களில் காயங்கள், அடிப்பட்ட தழும்புகள் காணப்படலாம். பெரும்பாலும் அவை இல்லாத நிலையில் குறுங்கோள் அளவு இல்லாத விண்கல் பூமியில் மைய கடல் பகுதியில் மோதியிருக்கலாம் என்றும், அதனால் ஏற்பட்ட சுனாமி, இயற்கை பேரழிவால் டைனோசர்களுக்கான உணவு பற்றாக்குறை ஏற்பட்டு அவை இயற்கை மரணம் அடைந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.