ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 1 நவம்பர் 2023 (09:06 IST)

அகதிகள் முகாமில் வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி..!

காசாவில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதல் காரணமாக 50க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளதாக தகவல் வழியாக உள்ளன.

காசா என்ற பகுதியில் அகதிகள் தங்க வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த அகதிகள் முகாமில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இன்று காலை நடந்த இந்த தாக்குதலை 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானதாகவும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பாலஸ்தீனம் கூறியுள்ளது.

அகதிகள் தங்கியுள்ள முகாம் என்று தெரிந்தே இஸ்ரேல் ராணுவம் குண்டு போட்டதாக கூறியுள்ளததாக செய்தி வெளியாகியுள்ளது. பொதுமக்களோடு பொதுமக்களாக ஹமாஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதால் தீவிரவாதிகளை ஒழிப்பது மட்டுமே தங்கள் குறிக்கோள் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva