1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Israel attack and kill main commander of hamas

ஏவுகணை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட தளபதி பலி! – இஸ்ரேல் தகவல்!

Hamas
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தளபதியை கொன்று விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.



கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆதரவு ஹமாஸ் அமைப்பு ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்கியதுடன், எல்லைக்குள் புகுந்து பலரை கொன்று, சிலரை பிணைக்கைதியாகவும் பிடித்து சென்றுள்ளது. இதற்கு பதிலடியாக தற்போது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸின் பதுங்கு பகுதியான காசா முனை மீது வான்வழி, தரை வழி தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதிகள், கமாண்டர்களை அழித்து ஹமாஸை நிர்மூலமாக்குவதை குறியாக கொண்டு இஸ்ரேல் செயல்பட்டு வரும் நிலையில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் பலரும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர். முன்னதாக ஹமாஸின் முக்கியமான 3 தளபதிகள் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது மற்றுமொரு முக்கிய தளபதியான இஸ்லாம் அபு ருக்பே கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை அமைப்பான ஷின்பெட் தெரிவித்துள்ளது. இஸ்ரேலை பல ஆயிரம் ராக்கெட்டுகளை கொண்டு தாக்கிய சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர் இந்த இஸ்லாம் அபு ருக்பே என சொல்லப்படுகிறது.

Edit by Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தீபாவளிக்கு மொத்தமாக 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கம்! – போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு!