1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (10:14 IST)

இஸ்ரேல் இரண்டாம் கட்ட தாக்குதல்; 8 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலி!

காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 8 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஏழாம் தேதி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தற்போது இஸ்ரேல் ஹமாஸின் ஆதிக்கத்திலுள்ள காஸா முனை மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. சமீபத்தில் காஸாவில் உள்ள தேவாலயம் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உலக அளவில் கண்டனங்களை பெற்றது.

வான் வழியாக மட்டும் தாக்கி வந்த இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலையும் தொடங்கியுள்ளது. முதற்கட்ட போர் முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட தாக்குதலை தொடங்க உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்துள்ளார். இந்நிலையில் ஹமாஸ் தரப்பு வெளியிட்டுள்ள செய்தியில் இதுவரை இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் 8000 பாலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில் போர் நிறுத்தத்திற்காக ஐ நா சபை மற்றும் உலக நாடுகள் இஸ்ரேலிடம் பேசி வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து போர் நிறுத்த பேச்சுவார்த்தையை புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K