பாலஸ்தீன மக்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்ட கோழை ஹமாஸ்! – அமெரிக்க அதிபர் கடும் விமர்சனம்!
இஸ்ரேல் ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் படையினர் பாலஸ்தீன மக்களின் பின்னால் ஒளிந்து கொள்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிராக தற்போது இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பின் பதுங்குதலமான காஸா பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலரும் பலியாகி வருவதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வந்தன.
தற்போது காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு போர்க்கால நிவாரண உதவிகளை செய்ய உலக நாடுகள் பலவும் முன்வந்துள்ளன. அமெரிக்கா தனது சார்பில் போர் கால உதவிகளை செய்வதாக அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடையே பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “இஸ்ரேல் தன்னுடைய மக்கள் மீது நடந்த படுகொலைக்கு பதிலடி கொடுக்க உரிமை உள்ளது. இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வோம். பாலஸ்தீன மக்களின் பிரதிநிதியாக காசா அமைப்பு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீன மக்களின் பின்னால் ஒளிந்து கொண்டு கோழைத்தனமாக செயல்படுகிறார்கள். எனினும் காசா மக்களுக்கு உணவு உள்ளிட்ட தேவையான உதவிகளை அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் செய்யும்” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K